Monday, September 6, 2010

எங்கே போகிறாய் அரசே!

வட இந்திய மாநிலங்களில் உள்ள அரசு கிடங்கிகளில் ஏராளமான கோதுமை மக்கி வீணாகிறது. இதை அனைத்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டு அரசின் அலட்சியப் போக்கினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. மக்கி வீணாக்கி விட்டதற்கு பொறுப்பான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கையும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளான அமைச்சரும் இதற்க்கு வருதப்பட்டதாகவோ, மன்னிப்பு கேட்டதாகவோ இது வரை செய்தி இல்லை.
இதைக் கண்டு கொதிப்படைந்த ஒரு தனி நபர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு அதிகப்படியாக உள்ள உணவு பொருட்களை இலவசமாக வழங்கலாமே என்று தீர்ப்பு கூறியது.
அதெல்லாம் பாலிசி அதாவது கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதி மன்றம் தலையிடக் கூடாது என்று பிரதமர் கூறுகிறார். ஏராளமான உணவுப் பொருட்களை வீணடித்துவிட்ட, வீணடித்துக் கொண்டிருக்கும் , இன்னமும் வீணடிக்கத் துடிக்கும் இந்த அரசைக் கேள்வி கேட்பதுதான் எப்படி, கண்டிப்பதுதான் எவ்வாறு, நேர் வழிப் படுத்துவதுதான் எங்கனம். இது ஜனநாயக அரசு தானா அல்லது ஈஸ்ட் இந்தியா கம்பனி ஆட்சியா?

No comments: