Friday, April 30, 2010

ஸ்ரீ ராம சர்மா எழுதுகிறார்!

பிற மொழிச் சொற்களை பத்திரிகைகள் மீடியாக்கள் கூட தவறாக அச்சிடுகின்றன, வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.
தவறு............................................................................ சரி.
பெனாசிர் பூட்டோ.......................................... பே நசிர் பூட்டோ
மேனகா காந்தி ................................................ மனேகா காந்தி
லால் பகதூர் சாஸ்திரி ................................லால் பகாதுர் சாஸ்திரி
வாரணாசி............................................................ வாராணசி.

Thursday, April 29, 2010

ஜ, ஷா, ஹ, க்ஷ, இவை வடமொழி எழுத்துக்கள் என்று தவறாக, திராவிட கட்சிகளால் சொல்லப்பட்டது. பாட புத்தகங்களில் கூட வடமொழி எழுத்துக்கள் என்று தலைப்பிடப்பட்டது. உண்மையில் இவை "பிற மொழி உச்சரிப்புகளை தமிழில் எழுத உதவும் வரிவடிவம்" என்று தலைப்பிட்டு இருக்க வேண்டும். இவ்வரி வடிவங்களை தமிழுக்கு ஏற்பாடு செய்தவர்கள் தமிழர்களே. ஆனால் அரசியல் காரணங்களால் வட மொழி மீது வெறுப்பு ஏற்படுத்தி பிரசாரம் நடந்தது. அவர்கள் நடத்தும் பத்திரிகைகளில் இரட்டை நடைமுறை பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக அவர்கள் கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின், ஜெயராமன், குரேஷி ஆகியோருக்கு பெயரை அப்படியே போடுவார்கள். ராஜாஜிக்கு மட்டும் ராசாசி என்று போடுவார்கள். இப்பொழுது கூட சில பத்திரிகைகளில் "செயலலிதா" என்று போடுகிறார்கள். இதனால் ஆங்கிலம் மற்றும் பிற மொழி வார்த்தைகளை தமிழில் தவறாக எழுதும் போக்கு காணப்படுகிறது. பிற மொழி பெயர்கள், பழமொழிகள் ஆகியவற்றைக் கையாளும் பொது அம்மொழியினர் எவ்வாறு உச்சரிப்பார்களோ அவ்வாறே , எழுதவேண்டும், உச்சரிக்கவேண்டும் என்பது பொது விதியாகும். பிற மொழி வார்த்தைகள் பழமொழிகள் வழக்கு மொழிகள் ஆகியவற்றை எவ்வளவு அதிகமாக தமிழில் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு தமிழ் வளரும் என்பதில் ஐயமில்லை.