இதை குமுதத்திலேயே எழுதினால் விற்பனை பாதிக்கும் என்பதால் கல்கண்டில் எழுத வைத்தார்கள். வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு தடங்கலாக என்னென்ன செய்ய முடியுமே அதையும் செய்தார்கள். பிறகு ஏ.எல்.சீனிவாசன் என்பவரைக் கொண்டு சிவகங்கைச் சீமை என்று போட்டியாக ஒரு படம் தயாரித்தார்கள். ம.பொ.சிவஞானம் உறுதியாக கட்டபொம்மன் படத்திற்கு support கொடுத்தார். ஒரு வழியாக கட்டபொம்மன் படம் வெளியில் வந்தது. அந்த படம் பல நாடுகளில் நடைபெற்ற திரைப் பட விழாக்களில் சிறந்த படம் என்று பரிசுகளை குவித்தது. சிவாஜி கணேசனுக்கு புகழ் மகுடம் சேர்த்தது. ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைத்தது. பொது மக்களும் பத்திரிகைகளும் பாராட்டின. குமுதம் மட்டும் "சிவாஜியின் நடிப்பு மிகை" என்று எழுதி பொறாமை பொச்செரிப்பைக் காட்டிக் கொண்டது. அதற்கு ஒரு ரசிகர் "சிவாஜியின் நடிப்பு மிகை என்று சொல்லி பகைவனாகிவிட்ட உன் சிகையை எடுத்தெரிய புகை வண்டியில் ஏறிவிட்டோம் ஜாக்கிரதை" என்று எழுதி இருந்தார். சிவகங்கை சீமை படத்தில் கட்டபொம்மனை தாக்கி ஏதும் வசனம் இடம் பெறாமல் பார்த்துக் கொண்ட போதிலும், நடிப்பும் பாடலும் நன்றாகவே இருந்தபோதிலும் இவர்களின் கட்டபொம்மன் எதிர்ப்பாலும், கட்டபொம்மன் பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்று விட்டதாலும் சரியாக ஓடவில்லை.
கல்கண்டு பத்திரிகையின் விற்பனை பல மடங்கு டவுன் ஆகிவிட்டதால் "கொள்ளைக் காரன்" கட்டுரையை ஒரு வழியாக நிறுத்திக் கொண்டார்கள். அவர்களின் legacy தான் கட்டபொம்மனை அவதூறாக பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு பயங்கர உள் நோக்கம் உள்ளது.
Saturday, February 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment