சில வாரங்களுக்கு முன்னர் நாளேடுகளில் ஒரு சிறிய இடத்தை ஒரு செய்தி ஆக்ரமித்து இருந்தது. கட்டபொம்மனை பற்றி ஒரு சிலர் அவதூறாக பேசியதாகவும் அதனால் அடிதடி கலாட்ட ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு நடவ்டிக்கை எடுக்கப் பட்டதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அவதூறாக பேசுகிறவர்களும் உண்டா என சிலர் ஆச்சரியமாக கேட்கிறார்கள். இதுக்கு ஒரு கூட்டமே உண்டு.
கல்கண்டு என்று ஒரு வார பத்திரிக்கை அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளி வந்து கொண்டிருந்தது. குமுதம் பத்திரிகையின் "வால்" என்று அதைப் பற்றி கூறுவார்கள். குமுதம் பத்திரிகையின் உரிமையாளர்களுக்கு கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியர் தமிழ்வாணன் தூரத்து உறவினர் ஆவார். நியுஸ் பிரிண்ட் கோட்டா அதிகமாக பெறுவதற்கும் இது போன்ற வால்கள் பயன்பட்டன. இந்த தமிழ்வாணன் கன்னிமேரா லைப்ரரியில் உட்கார்ந்து சிகிரெட் பிடித்துக்கொண்டு புத்தகம் படிப்பார். அதிலிருந்து காபியும் குறிப்பும் எடுத்துக்கொள்வார். அவைகள் துணுக்குகளாக கல்கண்டு பத்திரிகையில் வரும். முதலில் வரும் துணுக்கிற்கு பின்னால் வருவது முன்னுக்குப பின் முரணாக இருக்கும். குமுதம் வகையறாக்களுக்கு கட்டபொம்மனை பிடிக்காது. வீர பாண்டிய கட்டபொம்மன் படம் தயாரிக்க போவதாக செய்தி வந்ததும் இவர்கள் தமிழ்வாணனை விட்டு நாடோடி பாடல் சிலதை அடிப்படையாக வைத்துக்கொண்டு "கொள்ளைக் காரன் கெட்டி பொம்மு" என்று ஒரு தொடர் கட்டுரை கல்கண்டு பத்திரிகையில் வெளியிட வைத்தார்கள். அடுத்த அஞ்சலில் அதைப் பற்றி பார்ப்போமா!
Friday, February 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment