தேர்தல் வந்துவிட்டது! தவளைகள் கத்துகின்றன. மூன்றாவது அணி என்று தலைப்பு வைத்துக்கொண்டு சில அரசியல் கட்சிகள் பேரம் பேச துவங்கியுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க. இகம். வகம். ம.தி.மு.க. ஆகியவை ஒன்று சேர்ந்து ஒரு அணியாக செயல் பட முடிவு எடுத்துள்ளன. இவைகளுக்குள் சீட்டு பிரிப்பு சண்டை முடிவதற்குள் தேர்தல் வாபஸ் நாள் நெருங்கிவிடும். அப்படியே தேர்தலில் ஒரு அணியாக போட்டி இட்டாலும் தேர்தல் முடிந்ததும் இகம். வகம். ஆகிய இரண்டும் எந்த முடிவையும் எங்களது பொலிட் பீரோ-வை கேட்டுக்கொண்டு தான் எடுப்போம் என்று சொல்லிவிடும். பா.ம.க. தனியாக 'பதவி பேரத்தில்' இறங்கும். அ.தி.மு.க.-வால்அதனை அடக்க முடியாது. அரசு உயர் மட்டத்தில் ம.தி.மு.க.-வை அனைத்துக் கட்சிகளுமே கழட்டிவிட பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. 'திருமா'-வை அடக்கி விடுவார்கள். அவர் சும்மா டிரஸ் போட்டுகொண்டு போஸ் கொடுப்பதோடு சரி. இன்னும் எவ்வளவோ நாடகக் காட்சிகள் உள்ளன. பொறுமையாக பார்த்து ரசிப்போம்.
Tuesday, March 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment