Thursday, March 12, 2009

பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

பாகிஸ்தானில் நடப்பது குறித்து வரும் செய்திகளை படித்துப் பார்த்தால், எல்லாமே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது சில தடைகள் விதிக்கப் பட்டதால் அவர் வீதிக்கு வந்திருக்கிறார். சர்தாரி இன்னும் சில ஜட்ஜுகளுக்கு நியமன உத்தரவு தரவில்லை ஏனென்றால் அவர்கள் வந்தால் அவர் மீது உள்ள ஊழல் வழக்குகளை திரும்பவும் எடுப்பார்கள் என்று பயமாம்! பழைய ஜனாதிபதிக்கு சில ஜட்ஜுகளை பிடிக்காததால் அவர்களை பதவியிலிருந்து தூக்கினார். கிலானிக்கு சில ஜட்ஜுகளை மட்டுமே பிடிக்கும். சில ஜட்ஜுகள் இயல்பாகவே தலிபான் ஆதரவு ஜட்ஜுகள். இதனால் தான், எப்பவும் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் இராணுவம் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

No comments: