Friday, February 25, 2011

சில உதாரணங்கள்.... (தொடர்ச்சி)

CAG -எ நிர்வகிக்கும் கணக்குகள் எவ்வாறு உள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் பொது சேமநல நிதி எனப்படும் GPF சந்தா தொகை மாதா மாதம் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு கணக்கு எண் துறையின்சுருக்க எழுத்து உண்டு. அவ்வாறு அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அவர்கள் கணக்குகளில் வராமல் சில சமயம் விடுபட்டு விடுகிறது. (அது எப்படிகடவுளுக்கே வெளிச்சம்)CAG -யைக் கேட்டால் Pay & Accounts ஆபீஸ் -இக் கேள்! அவரைக் கேட்டால் ஊதியம் கொடுத்த அலுவலரைக் கேள் என்று இழுத்து அடிப்பார்கள். ஊழியர் கணக்கு சீட்டை வைத்துக் கொண்டு 'என்னிடம் பிடித்தம் செய்த தொகை என்ன ஆயிற்று' என்று அலைய வேண்டியதுதான். இம்மாதிரியான தொகை ௨000 ஆண்டு வரை 15,000 கோடிக்கு மேல்! மாநில ஊழியர்கள் பொது சேம நல நிதி கணக்கு பார்க்கும் AG .. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்ந்த கதை தான். தமிழ்நாடு கணக்காளர் 2000 ஆண்டு இவ்வாறு சேர்ந்த தொகை இரண்டாயிரம் கோடிக்கு மேல்! மற்ற மாநிலங்கள் எல்லாம் சேர்த்தால் பல லட்சம் கோடி ஆகும். இதற்க்கு யார் பொறுப்பு என்றே இது வரை வரையறுக்கப் படவில்லையாம்! இதற்கு அலுவலக பாஷையில் 'missing credit' என்று பெயர்.2000 ஆண்டுக்கு பிறகு இந்த மிஸ்ஸிங் கிரெடிட் குறைந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆக அரசு ஊழியர் வாங்கும் ஊதியம் என்ற வெள்ளைப் பணத்தையே, மிஸ்ஸிங் கிரெடிட் என்று கூறி கறுப்புப் பணமாக்கி விடுகிறவர் தான் இந்த CAG எனவே இவர் சொல்கிறார் என்று இவரைக் காட்டுவது வீண். பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கூட இந்த அலுவலர்க்கு அவ்வளவு வெயிட் கொடுப்பது இல்லை.


2G ஊழலை பாராளு மன்ற கூட்டு குழுவே நல்ல கணக்காலர்களை கொண்டு மற்றும் சி.பி.ஐ. இயக்குனர்களைக் கொண்டு ஆய்வு செய்து, ஊழல் பணம் எங்கெங்கு பதுக்கப் பட்டு இருக்கிறதோ அதனையும் கண்டு பிடித்து கைப்பற்ற வேண்டும்.

Sunday, February 13, 2011

சில உதாரணங்கள்!

ஒரு சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் பீகார் சென்றிருந்தார். அங்கு உருளைக் கிழங்கு அமோக விளைச்சல். விற்க முடியாமல் விவசாயிகள் திணறல். இவர் ஆயிரம் டன்கொள்முதல் செய்தார். அதிகாரிகள் பச்சை உருளைக் கிழங்கை பறித்த நிலையில் வாங்கி அதனை அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ் செட்டுக்கு கொண்டு வந்து அவைகளை புக் செய்ய பத்து நாள் பிடித்தது. அதற்குள் இருபது சதவீதம் கிழங்குகள் கெட்டுவிட்டன. அவைகளை water tight வாகன்களில் ஏற்றினர். கூட்ஸ் வண்டி சென்னை சால்ட் கொட்டார்ஸ் வந்து சேர முப்பது நாட்களுக்கு மேல் ஆனது. அதற்குள் வாகன் பூராவும் பச்சை பச்சையாக ஒழுக ஆரம்பித்துவிட்டது. வாகன் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த அடையாள சீட்டுகள் கூட நைந்துபோய் விட்டது. இந்நிலையில் சென்னையில் transhipment செய்யப்படவேண்டும். கூலியாட்கள் நாற்றம் தாங்கவில்லை. வயிற்றை புரட்டுகிறது என்று கூறி விட்டனர். எப்படியோ சமாதானப் படுத்தி கீழே இறக்கி வைத்து பிறகு அந்தந்த சேரும் இடங்களுக்கான வாகன்களில் ஏற்றினார்கள். இதற்குள் மொத்தம் அழுகி மண்வெட்டியால் வாரி வாரிக் கொட்டும் நிலை அடைந்துவிட்டது. இதற்க்கு பத்து நாட்கள் ஆனது. இப்படியாக வேலூர் வந்து சேர்ந்தது 200 டன் கிழங்கு. அதனை வாகன்களில் இருந்து இறக்க, ரயில்வே ரசீது வரவில்லை,placement இல்லை, கிரெடிட் நோட் இல்லை ஆகிய தடங்கல் தாண்டியதும் இறக்குகிற கூலியாட்கள் அனைவரும் இந்த வாகன் வந்ததில் இருந்து வாந்தி, மயக்கம் என்று கூறி வேலை நிறுத்தம் செய்துவிட்டனர். கூட்ஸ் கிளார்க்கும் உதவியாளரும் லீவு போட்டுவிட்டு ஓடிவிட்டனர். பல நாட்கள் போராடி scavengars அழைத்து வந்து இறக்கி லாரியில் ஏற்றி கண்காணாத ஒரு ஏரியில் பள்ளம் தோண்டி உருளை கிழங்குகள் புதைக்கப் பட்டன. இதற்கும் பொது சுகாதார அதிகாரி சான்று, கிராம மக்கள் கூட்டம் போட்டு அவர்கள் சம்மதம் வாங்குதல் போன்ற வேலை வேறு. ஆனால், நமது பொது கணக்காளர்,audit ரிப்போர்ட் என்ன எழுதியிருப்பார் என்று நினைக்கிறீர்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சரக்கு இறுதியாக இறக்கப்பட்ட இடங்களில் டேமரேஜ், வார்பெஜ் ஏன் அதிகம் ஆகியது என்று விளக்கம் கேட்டார்.
மொத்த விவகாரமும் அவருக்கு விளக்கியபின், "நான் நேரடியாகப் பார்த்தேன். வேறு வழி இல்லாத நிலையில் தான் இந்த செலவினம் ஆகியது" என்று மாவட்ட ஆட்சி தலைவர் கையெழுத்து வாங்கி அனுப்புங்கள்; நாங்கள் கோப்பை அத்துடன் முடித்துக் கொள்கிறோம் என்று பொது கணக்காளர் சொல்லி விஷயம் முடிந்தது.

" எனவே நானே நேரில் அலசிப் பார்த்துவிட்டேன்; வேறு வழியில்லை; கோப்பினை முடித்துக் கொள்ளலாம் என்று சம்பந்தப் பட்ட அமைச்சர், பிரதமர் சான்று கொடுத்தால் 2G -யும் அதோடு முடிவடையும்."

Monday, January 31, 2011

ஸ்ரீ ராம சர்மா எழுதுகிறார்! சி.எ.ஜி. பற்றி!

2G அலைக்கற்றை விவகாரத்தில் திரு. ராஜா தவறுகள் ஊழல்கள் பற்றி எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. பாராளுமன்ற குழு விசாரணைக்கு மேற்படி விவகாரம் உட்படுத்தப் படவேண்டும் என்பது சரியானது தான்.
இருப்பினும் இந்த சி.எ.ஜி. பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு. அமைச்சர்களை கூண்டில் ஏற்றுவதற்கோ, செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை தண்டிப்பதற்கோ அதன் அறிக்கை பயன்பட்டதாக வரலாறு கிடையாது. அரசு தரப்பில் நடந்த வரவினங்கள், செலவினங்கள் சட்டம், விதிகள் படி நடந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு அவருடைய வேலை முடிந்தது. CAG எழுதின தணிக்கை மறுப்புகளை அவரது அலுவலகத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்களை அழைத்து வந்து பதில் எழுதிக் கொடுத்தல், சரி செய்யப்பட்டது
(Settled) என்று எழுதி க்ளோஸ் செய்து கொள்வார்கள். CAG அலுவலகத்தில் பார்க்கவேண்டிய கணக்குகளே தவறாகவும் பதில் சொல்லப்படாமலும் கிடக்கும். சில உதாரணங்கள் பார்ப்போமா!